ஐ….. வன்னிக் களமுனை சூடுபிடிக்கத் தொடங்கி விட்டதா? ……. இல்லவே இல்லை. இறுக்கமடையத் தொடங்கி விட்டது என்று சொல்வதே பொருந்தும். கடந்த இரு வாரங்களாக வன்னிக் களமுனையில் மிகக் கடுமையான சண்டைகள் நிகழ்ந்தன. படைத்தரப்பு நினைத்தது போன்று முன்னகர முடியவில்லை. மாறாக அவர்கள் பேரிழப்பையே சந்தித்தனர். இறந்த தமது சகாக்களின் உடல்களையும், ஆயுதங்களையும் புலிகளிடம் பறிகொடுக்க நேர்ந்தது. காரணம் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலின் சக்தியும் வேகமும் அதிகரித்திருந்தது. எனவே வடபோர்முனையில் சண்டையின் தீவிரத் தன்மை படிப்படியாக அதிகரித்துச் செல்வதையே இது காட்டுகிறது. இம்முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் குறைந்த இழப்புக்களுடன் சாதித்திருந்தனர். இதன் மூலம் ‘வன்னிப் போர்க்களத்தில் படைகள் வெற்றி நடை போடுகின்றனர்’ என்ற அரசின் பரப்புரை மாயைக்கு பலத்த அடியை வழங்கியதோடு ‘கிளிநொச்சிக்கு இன்னும் 12 மைல்கள்’ என்னும் கனவைக் கலைய வைத்திருக்கின்றது. அத்தோடு புலிகள் நீண்டநாள் காத்துவந்த மௌனத்திற்கு வன்னிக் கட்டளைப் பீடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மூவூடகத் தாக்குதல் மூலம் அதில் சொல்லியிருக்கிறார்கள் எனச் சொல்வதில் மிகை ஒன்றும் இல்லை.வன்னி மீதான படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் இயங்கு தளமாகவும் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான வவுனியா ஜோசப் முகாம் என யாவராலும் அறியப்பட்ட கூட்டுப் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட திடீர்ப் பாய்ச்சல் இலங்கையின் அரசியல் இராணுவ மட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திய தோடல்லாமல் பிராந்திய அரசியலிலும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது. வட போர் அரங்கின் கட்டளைப் பீடத்தின் மீது ஏன் குறிவைக்கப்பட்டது? எப்படி இலக்கு அடையப்பட்டது? இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் சாதித்தது என்ன? இத்தாக்குதலின் மூலம் அவர்கள் சொல்லும் செய்தி என்ன? என எழும் பல விதப்பட்ட வினாக்களுக்கு விடை தேடுவோமாயின் விடுதலைப் புலிகளின் போரியல்; விய10கம் என்பது யாராலும் ஊகிக்க முடியாததும் யாரும் எதிர் பார்க்காத திடீர் முடிவுகளாகவும் அதே நேரத்தில் எதிரியைக் குழப்பத்தில் ஆழ்த்துவதாகவும் இருக்கும் அதேவேளை தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையில் எதிராளியை இழுத்துச் செல்வதாகவும் இருப்பதனை அவதானிக்க முடியும்.
ஒரு போரில் பலமான எதிரியைத் தோற்க்கடித்து வெற்றிக் கனியை அடைய வேண்டுமாயின் சமர்க்களங்களில் பெருமளவு படையினரை வீழ்த்தி அடையும் வெற்றி மட்டும் போதாது. அதன் ஆயுத வளத்தோடு இயங்குதளத்தை சரிப்பதன் மூலம் ஒட்டுமொத்த எழுச்சியின் பால் செல்ல முடியும். இல்லாவிடின் வெற்றிக் கனி என்பது எப்போதும் கைமாறும் இயல்புடையதாகும். எனவே வன்னிப் போர் முனையில் படைகளின் நகர்வைத் தடுத்து இராணுவச் செயற்பாடுகளை முடக்கி அல்லது கடினமாக்கி விநியோகங்களைத் தடுத்து இராணுவ நகர்வுத் திட்டங்களைத் தாமதப் படுத்தியோ அல்லது மாற்றியமைப்பைச் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக நகர்ந்த எதிரியை தற்காலிக ஓய்வு நிலைக்குத் தள்ளி பின் படிப்படியாக நிரந்தர ஓய்வு நிலைக்கு இராணுவ நகர்வுகளை இட்டுச் செல்ல முடியும். இந்நோக்கத்தின் அடிப்படையில் தான் வவுனியா ஜோசப் படைத்தளம் குறிவைக்கப்பட்டது எனலாம்.
1970 களில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய இராணுவ முகாம் இன்று வவுனியா நகருக்குத் தெற்கே கிட்டத்தட்ட 1500 ஏக்கர்களுக்கு மேல் விழுங்கி ஊதிப் பொருத்துக் கிடக்கின்றது. வவுனியா மத்திய கல்லு}ரியின் விளையாட்டு மைதானம், வவுனியா கொரவப் பொத்தான வீதி, ஆகிய வற்றை வட எல்லையாகக் கொண்டு தெற்கே ஏ9 வீதிவழியே கிடடத்தட்ட 31ஃ2மைல் து}ரத்திலுள்ள மூன்று முறிப்புக்கு அப்பால் வரை வீதிக்குக் கிழக்கே நீண்டு செல்லுகிறது. அத்தோடு கிழக்கு மேற்காக ஒன்று தொடக்கம் இரண்ட மைல் அகலம் கொண்டதாகப் பரந்திருக்கும் இம் முகாம் வான்படை, தரைப்படை, கவசப்படை, விமான எதிர்ப்புப் படை, விமா ஓடுபாதை, வான் கண்காணிப்பு ராடர் நிலையம், வெடிபொருட் களஞ்சியம், தொழிநுட்பப் பிரிவு, கட்டளை பீடம் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டு நான்கு பக்கங்களிலும் இரண்டு அடுக்குக் கொண்ட முட்கம்பி வேலிகள், இரண்டிற்குமிடையில் முட் சுருட்கம்பி வலை, இதனை அடுத்து கிளைமோர் கன்னிவெடி, மற்றும் பொறிவெடிகள் அடங்கிய பாதுகாப்புப் பொறிமுறை அதனையடுத்து பலமான மண்அணையுடன் அதன் மேல் 25 மீற்றர் இடை வெளியில் பாதுகாப்பு அரணும், அதிலிருந்து வெளிப்புறத்தே கண்காணிக்க கூடியவாறு அதி உயர் வலுக் கொண்ட மின் ஒளிபாய்ச்சி இரவைப் பகலாக்கிக் கொண்டிருக்கும் வண்ணம் உச்சப் பாதுகாப்புடன் கூடியதான ஜோசப் முகாம் வன்னிக் கட்டளைப் பீடமாக நிமிந்து நிற்கிறது.
இத்தகைய உயர் பாதுகாப்பும், முக்கியத்துவமும் கொண்ட தளத்தின் மீது கடந்த 09ஆம் திகதி அதிகாலை 3.05 வான்புலிகள் ராடரின் கண்களுக்கு மண்ணைத் து}வி விட்டு துல்லியமான குண்டு வீச்சை மேற்கொண்டு கட்டளை பீடத்தை அழித்து தந்திரமாகத் தளந்திரும்ப 10 பேர் கொண்ட கரும்புலியணி தளத்தினுள் நுழைந்து துடைத்தழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வான் கண்காணிப்பு ராடர் மையத்தையும் வெடிபொருட் களஞ்சியத்தையும் தாக்கியழிக்க கிட்டுப் பீரங்கிப் படையணி துல்லியமான சூட்டாதரவினை வழங்கி பேரழிவை ஏற்படுத்தினர். புரிகள் திடீரென மேற்கொண்ட பாச்சலினால் தளத்தினுள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் படைச்சிப்பாய்கள் இலக்கின்றி வேட்டுக்களைத் தீர்த்ததனால் படைமுகாம் அல்லோல கல்லோலப்பட்டது. இத்தாக்குதலில் 20 ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும், 30ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தோடு மட்டுமல்லாமல் இரண்டு இந்தியப் பொறியியலாளர்களும் காமடைந்திருப்பது இந்திய அரசின் இரட்டை வேடத்தினை அம்பலப்படுத்திற்று.

யாரும் நெருங்க முடியாத படைத்தளத்தினுள் 10 கரும்புலிகள் எப்படி உள் நுழைந்தார்கள் என்பது விந்தையே. மற்றும் வலுவான வான் கண்காணிப்புடன் கூடிய தளத்திற்கு வான்புலிகள் பறந்துவந்து துல்லியமான குண்டுவீச்சை நிகழ்த்திவிட்டு பத்திரமாக தளம் திரும்பியது படைத்துறைத் தலைமைக்கு விழுந்த பலத்த அடி என்றே சொல்லாம். இதற்கிடையில் படைத்தரப்பு புலிகளின் வான்கலம் ஒன்றை திரத்திச் சென்று தாக்கியழித்ததாக ஒரு கதை விட்டிருக்கிறது. புலிகளின் வான் தாக்குதல் மீண்டும் நடை பெறத்தான் போகின்றது. அப்போது அதற்கு என்ன பதிலை படைத்தரப்புச் சொல்லப் போகின்றது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
ஜோசப் படைத்தளத்திற்கு தற்போது ஏற்பட்ட சேதத்தை சாதாரணமாக ஒரு தாக்குதல் மூலம் ஏற்படுத்த வேண்டுமாயின் குறைந்தது 300 போராளிகளையாவது நேரடியாகச் சண்டையில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். அதில் கணிசமான இழப்புக்க கூட ஏற்படலாம். ஆனால் புலிகள் தாக்குதலை லாவகமாகவும், மிகக் குறைந்த வளத்தைப் பயன்படுத்தியும் சாதித்திருக்கின்றனர். இரு விமானங்களையும,; 10 கரும்புலிகளையும், பீரங்கிப் படையையும் இங்கு பயன்படுத்தி குறுகிய நேரத்தில் மிகப்பெரிய அழிவினை ஏற்படுத்தியதன் மூலம் புலிகளின் சண்டை வியூகம் மாற்றமடைந்து செல்வதோடு ஒவ்வொரு வலிந்த தாக்குதல்களையும் இம்மியளவும் பிசகாது இருக்கும் வண்ணம் மிகப் பொறுமையாகவும், நோர்த்தியாகவும் திட்டமிடப்பட்டு நெறிப்படுத்தப் பட்டிருக்கிறது. எனவே இந்த வகையிலான அதிரடிகள் இனிவரும் காலங்களில் முன்னகர்வுக்கான வழங்கல் தளங்களின் மீது இடம் பெறுவது திண்ணம்.
மேலும் வன்னியில் இயங்குகின்ற மனித நேயத் தொண்டு நிறுவனங்களை அரசு வெளியேறுமாறு பணித்திருக்கின்ற நிலையில் போர் நடவடிக்கைகளால் இடம் பெயர்ந்த இரண்டு லட்சம் வன்னி மக்களுக்கான நிவாரணப் பணிகளை அரசு பொறுப்பெற்குமா அல்லது திறம்படச் செய்யுமா? என்பது சந்தேகத்துக்குரியதே. பெருந்தொகையான ஆளணி வளத்துடன் சுடிய தொண்டர் அமைப்புக்களினால் சரிவர நிர்வகிக்க முடியாத நிலையில் இருந்த வன்னியின் நிவாரணப் பணியை மிகக்குறைந்த ஊழியர்களைக் கொண்டு அரசு எவ்வாறு நிர்வகிக்கப் போகின்றதோ தெரியவி;ல்லை. இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பெரும் மனித அவலத்தை எதிர் கொண்டிருக்கின்ற வேளையில் பாராமுகமாக இருந்த இந்திய அரசு இராணுவ ரீதியில் முண்டு கொடுத்து ஜோசப் முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரு இந்திய்ப் பொறியிறலாளர்களி படுகாயமடைந்ததும்அதுபற்றிய விசாரணைகளே மேற்கொள்ள 165 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அனுப்பியிருப்பது இந்திய அரசின் உள் நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
இது இவ்வாறு இருக்க மேற்கு வன்னியில் இடம்பெற்ற கடுமையான சண்டைகளை அடுத்து களமுனை அமைதியாக உள்ளது போலத் தோன்றினாலும் இவ் அமைதி என்பது புயலுக்கு முந்திய அமைதியாகவே கொள்ளப்பட வேண்டும். ஏ9 வீதியில் திரு முறிகண்டியில் இருந்து ஆரம்பித்து அக்கராயன், வன்னேரி, ஜெயபுரம் ஊடாக ஏ32 வீதியில் பல்லவராயன் கட்டில் இணையும் அக்கராயன் குளம் வீதி படைத்தரப்பின் உயர்ந்த பட்ச இலக்காகத் தற்போதுள்ளது. இவ்வீதியை அடைவதற்காகவே கடந்த வாரம் கடும் சண்டை மூண்டிருந்தது. எனவே இவ்வீதி மரண வீதியாக மாறுவது தவிர்க்க முடியாததாகின்றது. ஏனெனில் இவ் வீதிக்குத் தெற்கே ஒரு மைல் இடைவெளியில் வீதிக்குச் சமாந்தரமாக கிழக்கு மேற்காக புலிகள் அமைத்திருக்கும் பாதுகாப்பு முன்னரண் நாச்சிக்குடாக் கடற்பரப்பிலிருந்து அக்கராயனுக்கு கிழக்கு வரை அதாவது அமைதிபுரம் வரை சுமார் 20 மைல்கள் வரை நீண்டு செல்கிறது. இவ்வரணைப் பாதுகாப்பதற்கு புலிகளின் முக்கிய கட்டளைத் தளபதிகள் மூவர் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். ஆகவே இவ் அரணைத் தாண்டி நகர்வது தற்கொலைக்குச் சமனாகும். மேலும் இவ்வரணுக்க அப்பால் ஒரு பின்நகர்வை விடுதலைப் புலிகள் செய்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது. அவ்வாறு ஒரு பின்நகர்வை புலிகள் செய்வார்களேயானால் ஏ32 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கான பாதை திறப்பை அனுமதிக்கின்றார்கள் அல்லது விட்டுக் கொடுக்கின்றனர் என்றே கொள்ள வேண்டும்.
அத்துடன் கடந்த இரு வாரங்களின் முன்னர் பாதுகாப்பமைச்சு வெளியிட்ட அறிக்கையிலே தாங்கள் முறிகண்டியைக் கைப்பற்றி விட்டதாகவும் இன்னும் சில கி.மீற்றர்கள் நகர்ந்தால் ஏ9 வீதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விடுவோம் என்றும் தெரிவித்தனர். உண்மையில் முறிகண்டி என்று மூன்று இடங்களை அழைக்கின்றனர். முதலாவதாக பிள்ளையார் கோயில் உள்ள இடம் திருமுறிகண்டி என்றும், ஏ9 வீதியில் கொக்காவில் சந்தியிலிருந்து 2மைல் தெற்கே மாங்குளப்பக்கமாக அமைத்திருப்பது பழைய முறிகண்டி ஆகும். மூன்றாவதாக அக்கராயன் குளத்தின் நீரேந்துப் பகுதியில் இருந்து நேரெதிரே தெற்குப் பக்கமாக 5 மைல் தொலைவில் உள்ளது காட்டு முறிகண்டி ஆகும்.
இந்த காட்டு முறிகண்டிப் பிரதேசத்திற்குள் இராணுவத்தின் தாக்குதல் குழுவொன்று காட்டிற்குள் நுழைந்துவிட்டு தாங்கள் முறிகண்டிப் பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டதாக படைத்தரப்பு தெரிவித்தது. இது போலவே அக்கராயனையும் தாங்கள் கைப்பற்றி விட்டதாக பொய்ப்பிரச்சாரம் செய்தது தெரிந்ததே. மேலும் இராணுவம் நுழைந்த காட்டு முறிகண்டியானது. ஏ9 வீதியில் உள்ள முறிகண்டியில் இருந்து தென்மேற்குத் திசையில் 8மைல் தொலைவில் உள்ளது. இங்கு மக்கள் வசிப்பதில்லை.
இவ்விடத்திற்குச் சென்று வருவதற்கு வண்டிற் பாதையைத் தவிர வேறு பாதைகள் இல்லை. அத்துடன் இராணுவத்தின் 57 வது பிரிகேட்டைச் சேர்ந்த படையினர் தற்போது நிலை கொ
ண்டுள்ள இடமான துணுக்காய் உயிலங்குளத்திலிருந்து வட கிழக்காக 7 மைல் தொலைவில் உள்ள இந்த காட்டு முறிகண்டி நோக்கி; காடுகளுடாக இரகசியமாக நகர்ந்து நிலைகொண்டு விட்டு தாம் முறிகண்டியில் நிற்பதாகப் அறிவித்திருக்கிறார்கள்..எனவே மேற்கு வன்னியில் நிகழ்ந்த சண்டைகளைப் போல் இன்னும் பல மூர்க்கமான சண்டைகளை வரும் வாரங்களில் எதிர் பார்க்கலாம். எது எப்படியிருப்பினும் இராணுவ முன்னகர்வுக்கெதிரான புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் உக்கிரமடைந்துள்ளது. எனவே வடக்கு நோக்கிய நகர்வு கடினமாகின்ற போது வன்னியின் கிழக்குப் புறமுள்ள அதாவது ஏ9 வீதியில் உள்ள புளியங்குளம், கனகராயன்குளம், மாங்குளம், கொக்காவில், திருமுறிகண்டி ஆகிய இடங்களை நோக்கி இராணுவ முன்னகர்வுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளது. ஆகவே மொத்தத்தில் வன்னிக் களமுனை இறுக்கமடைந்து செல்கின்றது எனலாம்.