Thursday, 25 September 2008

புலிகளின் மௌனம் சொல்லும் செய்தி என்ன?

கடந்த இருவாரங்களாக வன்னிமேற்கு போர் முனையில் தொடர்ச்சியான சண்டைகள். முன்னேற்ற முயற்சிகள் முறியடிப்புகள் என பல்வேறுபட்ட செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்தது யாவரும் அறிந்ததே. எனினும் கடந்தகால வன்னிப் போர்முனையில் சண்டையின் போக்கினை உற்று நோக்குகின்ற போது ஒரு சமச்சீரான போக்கினை அவதானிக்க முடியும் புலிகளின் சண்டை விய10கத்தினை அதாவது தற்காப்புத்தாக்குதல் என்றாலும் சரி வழிமறிப்புத்தாக்குதல் என்றாலும் சரி ஒரு வகையான சீரான போக்கினை கடைப்பிடிப்பதை அவதானிக்கலாம் அதே போன்று அரசபடைகளும் ஒரு வகையான சீரான முன்னேற்ற முயற்சிப் போக்கினை கையாள்வதையும் உணரமுடியும். எது எப்படி இருப்பினும் முரண்பட்ட இருதரப்பும் தற்போது களமுனையில் கடைப்பிடிக்கும வேறுட்ட போர் உத்திகளை நோக்குவோம்

கடந்த ஒரு வருடமாக மன்னார் வவுனியா வீதியிலிருந்து மன்னார் பெருநிலப்பரப்பினை
அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதோடு ஏ32 வீதியை கைப்பற்றி ப10நகரி ஊ10டாக யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதையை திறந்து யாழ்பாணத்தில் நிலை கொண்டுள்ள படையினருக்கான வழங்களை இலகுவாக்குவதனை நோக்காகக் கொண்டு அரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையானது வவுனியா மாவட்டத்தில் உள்ள கல்மடுவிலிருந்தும்; பிரமணாலங்குளத்திலிருந்தும் நேர் வடக்காக பாலமோட்டை, மடு நோக்கி மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வுகளில் பாலமோட்டை நோக்கி நகர்ந்த படையினர் பலமுறை முயன்றும் புலிகளின் கிடுக்குப்பிடிக்குள் அகப்பட்டிருக்கும பாலமோட்டையை படையினரால் முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. காரணம் ஏ9 வீதிக்கு சில மைல் து}ரம் மேற்கில்தான் பாலமோட்டை அமைந்துள்ளது. எனவே ஏ9 வீதியூடாகவோ அல்லது அதற்கு அண்;மையாகவோ இரானுவம் நகர்வதை அனுமதிப்பதில்லை என்ற முடிவினை புலிகள் எடுத்திருந்தனர.; இதனாலேயே இப்பகுதி இராணுவ நகர்வை இன்று வரை தடுத்து நிறுத்தியுள்ளனர் என கொள்ளலாம்.

அடுத்து மடு நோக்கி நகர்ந்த படையினரை பண்டிவிரிச்சானிலும், விளாத்திகுளத்திலும் நான்கு மாதங்களுக்கு மேல் தடுத்து நிறுத்தி இராணுவத்தின் முன்னணிப் படைப்பிரிவான 57 வது டிவிசன் படையினருக்கு தொடர்ச்சியான இழப்புக்களை ஏற்படுத்தி ஒரு கட்டத்தில் பாலம்பிட்டி பெரியமடு நோக்கி பின்நகர்ந்திருந்தனர். இப்பின்நகர்வுக்கு முன்னதாக புலிகளின் முதன்மைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கடுமையான சுகயீனம் காரணமாக இக்களமுனையிலிருந்து வெளியேறி மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில் சாவடைந்தமையும், அதனால் புலிகளின் அணிக்கு ஏற்பட்ட மனச்சோர்வும் இக்களமுனையில் இருந்து பின்நகர்வதற்கு ஒரு காரணமாகக் கூட இருந்திருக்கலாம்.

தொடர்ந்து பாலம்பிட்டி, பெரியமடுவை நோக்கி படையினர் நகர்வை மேற்கொண்ட அதே நேரம். மன்னார் உயிலங்குளத்திலிருந்தும், தள்ளாடியிலிருந்தும். சம நேரத்தில் அடம்பன், ஆண்டாங்குளம், ஆட்காட்டி வெளி. ஆகிய பகுதிகளை நோக்கி நகர்ந்த வேளை கடுமையான எதிர்த்தாக்குதலை நடாத்தி படையினருக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தியவாறு தமது ஆளணி ஆயுத வளங்களை பாதுகாத்தவாறு பள்ளமடுவுக்கு பின்நகர்ந்து பள்ளமடுவை தக்கவைப்பதற்கான முயற்ச்சிகளில் புலிகள் ஈடுபட்டிருந்தனர். இக்கட்டத்தில் பாலம்பிட்டி, பெரிமடு, ஆண்டாங்குளம், அடம்பன் உள்ளிட்ட பகுதிகள் இராணுவ வசமாகின.

அடுத்து இராணுவத்தரப்பு புலிகளின் கேந்திரநிலை என வர்ணி;க்கப்பட்ட விடத்தல்தீவை கைப்பற்றுவதற்காக தொடர்ச்சியாக பள்ளமடுவுக்கு முன்னேயுள்ள நாயாற்று வெளியில் புலிகள் அமைத்திருந்த மண் அணையுடன் கூடிய காப்பரணை உடைத்து உள்நுழைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சிகள் எதுவும் பயனளிக்காத நிலையில் பெரியமடுவில் இருந்து நேர் வடக்காக பூநகரி வரை படர்ந்து கிடக்கின்ற காட்டுப்பகுதியூடாக சிறாட்டி குளத்திற்கு இரகசியமாக நகர்ந்து சிறாட்டி குளத்தைக் கைப்பற்றியதோடு அங்கிருந்து நேர் மேற்கே திரும்;பி கூராய், ஆத்திமோட்டை, கள்ளியடி என நகர்ந்து. கள்ளியடியில் ஏ32 வீதியை வெட்டிக் குறுக்கறுத்து பள்ளமடு விடத்தல் தீவுக்கான புலிகளி;ன் வழங்கல்ப் பாதையைத் துண்டித்து படிப்படியாக மன்னார் மாவட்டத்தின் முழுப்பிரதேசத்தையும் இராணுவம் கைப்பற்றிக் கொண்டது.

சிறாட்டி குளத்திலிருந்து படைகள் சற்றுக் கிழக்கே நகர்ந்து நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், வவுனிக்குளத்தின் தென்பகுதி அணைக்கட்டு வரை படையினர் முன்னேறியிருந்தனர். அத்தோடு சிறாட்டிகுளத்திலிருந்து வடக்காக நகர்ந்த படைகள் ஒட்டங்குளம் வரையும் நகர்ந்திருந்தனர். இப்பகுதிகளில் ஏற்பட்ட வழிமறிப்புத் தாக்குதல்களிலும் சரி புலிகள் இயலுமான வரை எதிர்த் தாக்குதலை நடாத்தி எதிர்த் தரப்புக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படு;த்தியவாறே பின்நகர்ந்தனர். இறுதியாக வெள்ளாங்குளத்திற்குத் தெற்கே பாலியாற்றை அண்மித்ததாக பாலியாற்றுக்குச் சமாந்தரமாக மேற்குக் கிழக்காக மேற்குக் கடற்கரையில் இருந்து வவுனிக்குளம் வரை புலிகள் அமைத்திருந்த பாதுகாப்பு அரண்களைத் தாண்டி முன்னேறுவதற்கு ஏ32 வீதியிலும், நட்டாங்கண்டல் துணுக்காய் வீதியிலும், வவுனிக்குளத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பாலிநகர் ஊடாகவும் முன்னேறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சிகள் பயனளிக்காத நிலையில் சம நேர த்தில் வவுனிக்குளத்தின் வடகிழக்குப் புறமாக கொல்லவிளாங்குளம் மற்றும் வன்னிவிளாங்குளம் நோக்கிய ஒரு நகர்வையும், வெள்ளாங்குளத்திற்கும் கல்விளானுக்கும் இடைப்பட்ட பெரும் காட்டுப்பகுதியினு}டே வடக்காக நகர்ந்து வெள்ளாங்குளம் துணுக்காய் வீதியை கைப்பற்றி அவ்வீதியையும் தாண்டி மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து சில மைல்கள் து}ரத்தில் மேற்கு நோக்கித் திரும்பி விடத்தல்தீவைக் கைப்பற்றியது போன்றதொரு ஊடறுப்பை ஏ32 வீதியில் முழுங்காவில் ஏரிப்பகுதியடியில் செய்ததன் மூலம் முழுங்காவிலையும் இராணுவம் கைப்பற்றியிருந்தது.

அடுத்து கல்விளான் துணுக்காய்ப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு இராணுவம் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் ஒவ்வொன்றின் போதும் புலிகளின் முன்னரங்கப் பகுதியில் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்திக்க நேர்ந்தது இதனாலேயே காட்டுப் பகுதியினு}டாக வடக்கு நோக்கி தென்னியங்குளக் காட்டுப் பகுதிவரை நகர்ந்து அங்கிருந்து தென் கிழக்கில் உள்ள உயிலங்குளத்தைக் கைப்பற்றி துணுக்காயை மும்முனைகளில் முற்றுகையிட்டதன் மூலம் கல்விளான் துணுக்காய்ப் பகுதியிலிருந்து புலிகள் மல்லாவி, தேறாங்கண்டல் நோக்கி பின்நகர் வேண்டதாயிற்று. எனினும் இங்கும் மல்லாவியை முற்றுகையிடுவதற்காக மல்லாவியி;ன் கிழக்குப் புறத்தே நகர்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சி புலிகளின் பலத்த எதிர்த் தாக்குதலினால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஏ9 வீதிக்கு அண்மையாக உள்ள வன்னிவிளாங்குளப் பகுதிக்கு இராணுவம் நகர்வதை புலிகள் அனுமதிக்க மாட்டார்கள் எனக்கொள்ளலாம்.

எனவே பாலமோட்டையிலிருந்து கிழக்குப் புறமாக நகர்வதற்கோ. அல்லது அதனை அடுத்த குஞ்சுக்குளம், மூன்றுமுறிப்பு, வவுனிக்குளம் ஆகியவற்றைத் தொடுக்கின்ற நோர் கோட்டிற்குக் கிழக்கே அதாவது ஏ9 வீதிக்கு அண்மித்த பகுதியை நோக்கி இராணுவம் நகர்வதை தொடர்ச்சியாக விடுதலைப் புலிகள் பலத்த எதிர்த் தாக்குதலை மேற்கொண்டு தடுத்து நிறுத்தி வைத்திருப்பனை அவதானிக்க முடிகிறது. இதிலிருந்து வன்னியின் கிழக்குப் புறம் நோக்கி நகர்வதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். என்பது புலனாகின்றது. இதற்கு இன்னுமோர் சான்று என்னவெனில் மணலாற்றுப் பகுதியில் இராணுவம் மேற்கொண்ட முன்நகர்வுகள் யாவற்றையும் புலிகள் பலத்த எதிர்த் தாக்குதலை நடத்தி முறியடித்திருக்கின்றனர்.

மேலும் கடந்த வாரம் வன்னேரிக்குளம், அக்கராயன் பகுதிகளை நோக்கி காடுகளினு}டாக இராணுவம் நகர்ந்து அப்பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக வன்னேரிக்குளக் காட்டுப்பகுதியில் கடுமையான சண்டைகள் இடம்பெற்றிருக்கின்றன. இங்கும் வன்னேரிக்குளப் பகுதிக்கு நகர்ந்த இராணுவத்தினர் அடுத்த கட்டமாக மேற்கு நோக்கித்திரும்பி ஜெயபுரம், பல்லவராயன் கட்டுப்பக்கமாக முன்நகர முயல்கின்றனர். இதன் மூலம் எல் வடிவில் நகர்ந்து நாச்சிக்குடாவில் நிலைகொண்டிருக்கும் புலிகளை பின்நகர்த்தும் தந்திரோபாயத் தாக்குதலாகவே அமைகிறது.

அக்கராயன் பகுதியில் தரி;த்து நிற்பதாகவும் கிளிநொச்சியை அடைய இன்னும் 12 மைல்கள் து}ரம் தான் இருப்பதாகவும் அரசதரப்பு பெருமெடுப்பிலான பரப்புரையை மேற்கொண்டாலும் கூட உண்மையில் அக்கராயனைக் கைப்பற்றி அங்கிருந்து கிளிநொச்சிக்கு நகருகின்ற திட்டம் எதுவும் படைத்தலமையிடம் தற்போதைக்கு இல்லை என்றே சொல்லலாம். காரணம் ஏ9 வீதிக்கு அண்மையாக இராணுவம் நகர்வதை விடுதலைப் புலிகள் கடுமையாக எதிர்ப்பர். எனவே தற்போதைய சூழலில் சண்டை வலுவுடைய முன்னணிப் படைப்பிரிவுகளை கிளிநொச்சி நோக்கி நகர்த்தி பெரும் சண்டைகளை எதிர்கொண்டு படையணிகளைச் சிதைக்க இராணுவத் தலமை தயாராக இல்லை. எனினும் கிளிநொச்சி நோக்கி நகர்வு என்று ஒரு சிறிய திசை திருப்புத் தாக்குதல் இடம் பெறுவதற்கான சாத்தியமே உள்ளது. இனிவரும் வாரங்களில் கிளிநொச்சி மீது கடுமையான எறிகணைத் தாக்குதல் மூலம் கிளிநொச்சி நகர மக்களை இடம் பெயரச் செய்து கிளிநொச்சியின் இயல்பு நிலையை முடக்க முயலலாம்.

கடந்த முதலாம் திகதி மல்லாவியை இராணுவம் கைப்பற்றி விட்டதாக அறிவித்திருக்கிறது. இனி அடுத்த கட்டமாக மல்லாவியின் நேர்வடக்கே நகர்ந்து தேறாங்கண்டல், ஜங்கங்குளம், ஆகியவற்றைக் கைப்பற்றுவதோடு இப்பிரதேசத்துள் அடங்குகின்ற ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தையும் படைகள் கைப்பற்றி விட்டோம். செய்தியை வரும் வாரங்களில் அரச ஊடகங்களுடாக அறியலாம். அக்கராயன் பகுதியின் காட்டுப் பகுதிவரை முன்னேறிய இராணுவம் அடுத்த நகர்வாக பல்லவராயன் கட்டு – அக்கராயன்குளம் வீதியைக் கடந்து நேர் வடக்காக முன்னேறி எள்ளுக்காட்டுப் பகுதியூடாக பூநகரி - பரந்தன் வீதியில் உள்ள நல்லு}ரைக் கைப்பற்றி யாழ்க்குடாக் கடல்நீரேரியுடன் தொடுப்பதன் மூலம் மேற்கு வன்னியின் கடற்பகுதியையும், நிலப்பகுதியையும் கைப்பற்றி யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை (ஏ32 வீதியூடாக) திறந்து தமது முதல் இலக்கினை பூர்த்தி செய்ய முனைகின்றது.

அடுத்து ஏ32 வீதியூடாக பல்லவராயன்கட்டு நோக்கியோ அல்லது நாச்சிகுடா, கிராஞ்சி பகுதிகளுடாகவோ முன்னேறுகின்ற போது கடும் எதிர்த் தாக்குதலை புலிகள் நடத்தினாலும் கூட ஒரு கட்டத்திற்கு அப்பால் தமக்கு இழப்புக்கள் அதிகரிக்கும் எனக் கருதினால் இங்கிருந்தும் கூட புலிகள் பின்வாங்கத் தயங்க மாட்டார்கள். சிலசமயம் ஏ32 வீதியை தக்கவைக்க இயலுமானவரை போரிட்டு எதிரணிக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி தமக்குத் தேவையேற்படின் படிப்படியாக பின்வாங்குகின்ற ஆச்சரியமான முடிவைக்கூட புலிகளின் தலைமை எடுக்கலாம். இப்பின் வாங்கலானது தமது இலக்கினை எதிர்பார்த்து காத்திருப்பதாகக் கூட அமையலாம். ஏனெனில் ஜயசிக்குறு}ய் நடவடிக்கையின் போது ஏ9 வீதியை விட்டுக் கொடுக்கின்ற முடிவு எடுத்ததனாலேயே வன்னியின் கிழக்குக் கட்டளைப் பீடம் மேற்குக் கட்டளைப் பீடம் என இரண்டு கட்டளைப் பீடங்களை புலிகள் உருவாக்கியிருந்தமையை நாம் நினைவில் கொள்ளத்தக்கது.

இங்கே இராணுவத்தின் ஒவ்வொரு படைநடவடிக்கையிலும் இடங்களைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவும் காட்டுப்பகுதியினு}டாகவே நகர்ந்து பின்னர் மேற்கு நோக்கித் திரும்பி பெட்டியடித்தல், அல்லது பட்டியடைத்தல் முறைமூலம் படிப்படியாக பிரதேசங்களை கைப்பற்றுகின்ற மூலஉபாயத்தை கடைப்பிடிப்பதனையும். பிரதான இலக்கான ஏ32 வீதியை கட்டுப்பாட்டில் கெண்டுவருவதோடு வன்னி மேற்கின் கடற்பகுதியை அதாவது மன்னாரில் இருந்து பூநகரி வரையான கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கத்தை இல்லாதொழித்து வன்னி மேற்கினை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்ற நோக்கத்தை கொண்டதாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்துக்கான பாதை திறப்பு என்பது மன்னாரில் இருந்து பூநகரி வரை வடக்குத் தெற்காக நீண்டு பரந்து கிடக்கின்ற காட்டுப்பகுதியூடான தொடர்ச்சியான நகர்வின் மூலம் சாத்தியப்படும் எனப்படைத் தலைமை உறுதியாக நம்புகின்றது. இது வியட்நாமில் அமெரிக்கப் படைகள் வியட்கொங் போராளிகள் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு ஒத்ததான ஒரு படை நகர்வாகக் குறிப்பிட முடியும்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆரம்பத்தில் கொரில்லாப் போர்முறை படையணியாக இயங்கி வந்த புலிகள் படிப்படியாக மரபுவழிப் படையணியாக பரிநாம வளர்ச்சி அடைந்து முப்படைகளும் கொண்ட மரபுவழி இராணுவமாக தம்மை நிலை நிறுத்திக் கொண்ட போதும் முன்னைய கெரில்லாப் படையணிகளுக்குரிய சிறப்பம்சமான காட்டுப்புறச் சண்டைகளின் யாம்பவான் என்ற நிலையைத் தற்போது சற்று இழந்திருப்பதை மறுக்க முடியாது இதனை கடந்த காலங்களில் முதலாம், இரண்டாம் கட்ட ஈழப்போரிலும், மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதிக்காலம் வரையிலும் காட்டுப் புறச்சண்டைகளில் புலிகள் தான் ராஜாக்கள் என்ற நிலை இருந்தது உண்மையே. ஆனால் மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட ஜயசிக்குறு}ய் இராணுவ நடவடிக்கையில் ஏற்பட்ட காட்டுச் சண்டைகளில் புலிகள் தங்களுடைய ராஜாக்கள் என்ற நிலையை இழந்திருந்தனர். ஆனால் நகரப்புறங்கள், கிராமங்கள், வயல்வெளிகள், சதுப்புநிலங்கள், கடற்கரையோரங்கள் ஆகியவற்றில் ஏற்படுகின்ற சண்டைகளில் தங்களுடைய கீர்த்;தியை நிலைநிறுத்தினர். ஏனெனில் மரபுவழி இராணுவ மயமாக்கலில் புலிகள் சீரிய வளர்ச்சியடைந்துள்ளமையை இது எடுத்துக் காட்டுகிறது. அதற்காக காட்டுப்புறச் சண்டையைப் புலிகளால் எதிர்கொள்ள முடியாது என்று நான் சொல்லவரவில்லை. முன்பு இருந்ததிலும் விட தற்போது சற்றுப் பின்னடைந்திருக்கின்றனர். என்றே சொல்லலாம். எனவே எதிர் காலத்தில் இக்குறைபாட்டை நிவர்த்தி செய்கின்ற நடவடிக்கையில் புலிகள் இயக்கம் தற்போது கூடிய கவனம் செலுத்துவதாக வன்னித் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

எது எப்படியாயினும் வன்னிப் போர்களமானது இரு தரப்பிலும் ஒரு சீரான போக்கினை அவதானிக்க முடிகிறது. படைத்தரப்பை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய பிரதான முன்னேற்ற ஊடகமாக யாழ்க் கடல்நீரேரிப் பகுதியில் இருந்து வில்பத்துக் காட்டுப் பகுதிவரை ஏ9 வீதிக்கும் - ஏ32 வீதிக்கும் இடையில் சமாந்தரமாக வடக்குத் தெற்காக பரந்து கிடக்கின்ற வன்னி மேற்கின் காட்டுப் பகுதி விளங்குகின்றது. பிரதான நகர்வானது இக்காட்டுப் பகுதியூடாக நகர்ந்து படிப்படியாக ஏ32 வீதியையும், அதனை அண்மித்த மேற்குக் கடற்கரையையும் வன்னி மேற்கின் பிரதான தமிழர் வாழ்விடங்களைக் கையகப் படுத்துவதோடு ஏ9 வீதியின் செயற்பாட்டை முடக்குவதுமாகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது.

அதே நேரம் புலிகளை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய தாக்குதல் வியூகங்கள் யாவும் வன்னி கிழக்கை இராணுவம் நெருங்காமல் அதாவது ஏ9 வீதியை இராணுவத்தை அண்மிக்க விடாமல் கடுமையாக எதிர்த்து தடுத்து நிறுத்துவதோடு மேற்கு வன்னியின் வடபுறமாக நகருகின்ற இராணுவ முன்னணிப் படைப்பிரிவை தாக்கியழித்து படிப்படியாக முன்னணிப் படைப்பிரிவுகளைச் சிதைத்து இயலுமான வரை தடுத்து நிறுத்தி ஒரு கட்டத்தில் தந்திரமாகப் பின்நகர்ந்து ஆயுத ஆளணி வளங்களைப் பாதுகாப்பதோடு கூம்புவடிவில் முன்னகர அனுமதிக்கின்ற போக்கினை மேற்கௌ;வதாகத் தெரிகின்றது. இதிலிருந்து விடுதலைப் புலிகள் எந்தப் பiடைத்துறை ஆய்வாரள்களும் எதிர்பார்க்காத ஆனால் ஆச்சரியமான முடிவை எடுத்திருக்கிறார்கள். எனவே வன்னிப் போர்க்களம் என்பது புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சீராக நகர்ந்து செல்வதாகவே தோன்றுகிறது. ஆகவேதான் அரச தரப்பும் சரி ஊடகங்களும் சரி பலவாறான அறிக்கைகளையும், செய்திகளையும். வெளியிட்டாலும் புலிகள் தரப்பு இவற்றை காதில் வாங்காதது போன்று பெரிதாக எதனையும் அலட்டிக் கொள்ளாமல் மௌனமாகத் தங்களுடைய நடவடிக்கைகளை ஓசைபடாமல் செய்து கொண்டிருக்கின்றனர். எனவே புலிகளின் மௌனம் சொல்லும் செய்தி என்னவெனில் புலி என்னும் பொறியில் எலி இன்னும் பொறியில் உள்ள இரையைக் கௌவவில்லை என்பதேயாகும்.




No comments: