Thursday, 25 September 2008

சூடு பிடிக்கிறதா வன்னிக் களமுனை?...

ஐ….. வன்னிக் களமுனை சூடுபிடிக்கத் தொடங்கி விட்டதா? ……. இல்லவே இல்லை. இறுக்கமடையத் தொடங்கி விட்டது என்று சொல்வதே பொருந்தும். கடந்த இரு வாரங்களாக வன்னிக் களமுனையில் மிகக் கடுமையான சண்டைகள் நிகழ்ந்தன. படைத்தரப்பு நினைத்தது போன்று முன்னகர முடியவில்லை. மாறாக அவர்கள் பேரிழப்பையே சந்தித்தனர். இறந்த தமது சகாக்களின் உடல்களையும், ஆயுதங்களையும் புலிகளிடம் பறிகொடுக்க நேர்ந்தது. காரணம் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலின் சக்தியும் வேகமும் அதிகரித்திருந்தது. எனவே வடபோர்முனையில் சண்டையின் தீவிரத் தன்மை படிப்படியாக அதிகரித்துச் செல்வதையே இது காட்டுகிறது. இம்முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் குறைந்த இழப்புக்களுடன் சாதித்திருந்தனர். இதன் மூலம் ‘வன்னிப் போர்க்களத்தில் படைகள் வெற்றி நடை போடுகின்றனர்’ என்ற அரசின் பரப்புரை மாயைக்கு பலத்த அடியை வழங்கியதோடு ‘கிளிநொச்சிக்கு இன்னும் 12 மைல்கள்’ என்னும் கனவைக் கலைய வைத்திருக்கின்றது. அத்தோடு புலிகள் நீண்டநாள் காத்துவந்த மௌனத்திற்கு வன்னிக் கட்டளைப் பீடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மூவூடகத் தாக்குதல் மூலம் அதில் சொல்லியிருக்கிறார்கள் எனச் சொல்வதில் மிகை ஒன்றும் இல்லை.

வன்னி மீதான படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் இயங்கு தளமாகவும் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான வவுனியா ஜோசப் முகாம் என யாவராலும் அறியப்பட்ட கூட்டுப் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட திடீர்ப் பாய்ச்சல் இலங்கையின் அரசியல் இராணுவ மட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திய தோடல்லாமல் பிராந்திய அரசியலிலும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது. வட போர் அரங்கின் கட்டளைப் பீடத்தின் மீது ஏன் குறிவைக்கப்பட்டது? எப்படி இலக்கு அடையப்பட்டது? இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் சாதித்தது என்ன?
இத்தாக்குதலின் மூலம் அவர்கள் சொல்லும் செய்தி என்ன? என எழும் பல விதப்பட்ட வினாக்களுக்கு விடை தேடுவோமாயின் விடுதலைப் புலிகளின் போரியல்; விய10கம் என்பது யாராலும் ஊகிக்க முடியாததும் யாரும் எதிர் பார்க்காத திடீர் முடிவுகளாகவும் அதே நேரத்தில் எதிரியைக் குழப்பத்தில் ஆழ்த்துவதாகவும் இருக்கும் அதேவேளை தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையில் எதிராளியை இழுத்துச் செல்வதாகவும் இருப்பதனை அவதானிக்க முடியும்.

ஒரு போரில் பலமான எதிரியைத் தோற்க்கடித்து வெற்றிக் கனியை அடைய வேண்டுமாயின் சமர்க்களங்களில் பெருமளவு படையினரை வீழ்த்தி அடையும் வெற்றி மட்டும் போதாது. அதன் ஆயுத வளத்தோடு இயங்குதளத்தை சரிப்பதன் மூலம் ஒட்டுமொத்த எழுச்சியின் பால் செல்ல முடியும். இல்லாவிடின் வெற்றிக் கனி என்பது எப்போதும் கைமாறும் இயல்புடையதாகும். எனவே வன்னிப் போர் முனையில் படைகளின் நகர்வைத் தடுத்து இராணுவச் செயற்பாடுகளை முடக்கி அல்லது கடினமாக்கி விநியோகங்களைத் தடுத்து இராணுவ நகர்வுத் திட்டங்களைத் தாமதப் படுத்தியோ அல்லது மாற்றியமைப்பைச் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக நகர்ந்த எதிரியை தற்காலிக ஓய்வு நிலைக்குத் தள்ளி பின் படிப்படியாக நிரந்தர ஓய்வு நிலைக்கு இராணுவ நகர்வுகளை இட்டுச் செல்ல முடியும். இந்நோக்கத்தின் அடிப்படையில் தான் வவுனியா ஜோசப் படைத்தளம் குறிவைக்கப்பட்டது எனலாம்.

1970 களில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய இராணுவ முகாம் இன்று வவுனியா நகருக்குத் தெற்கே கிட்டத்தட்ட 1500 ஏக்கர்களுக்கு மேல் விழுங்கி ஊதிப் பொருத்துக் கிடக்கின்றது. வவுனியா மத்திய கல்லு}ரியின் விளையாட்டு மைதானம், வவுனியா கொரவப் பொத்தான வீதி, ஆகிய வற்றை வட எல்லையாகக் கொண்டு தெற்கே ஏ9 வீதிவழியே கிடடத்தட்ட 31ஃ2மைல் து}ரத்திலுள்ள மூன்று முறிப்புக்கு அப்பால் வரை வீதிக்குக் கிழக்கே நீண்டு செல்லுகிறது. அத்தோடு கிழக்கு மேற்காக ஒன்று தொடக்கம் இரண்ட மைல் அகலம் கொண்டதாகப் பரந்திருக்கும் இம் முகாம் வான்படை, தரைப்படை, கவசப்படை, விமான எதிர்ப்புப் படை, விமா ஓடுபாதை, வான் கண்காணிப்பு ராடர் நிலையம், வெடிபொருட் களஞ்சியம், தொழிநுட்பப் பிரிவு, கட்டளை பீடம் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டு நான்கு பக்கங்களிலும் இரண்டு அடுக்குக் கொண்ட முட்கம்பி வேலிகள், இரண்டிற்குமிடையில் முட் சுருட்கம்பி வலை, இதனை அடுத்து கிளைமோர் கன்னிவெடி, மற்றும் பொறிவெடிகள் அடங்கிய பாதுகாப்புப் பொறிமுறை அதனையடுத்து பலமான மண்அணையுடன் அதன் மேல் 25 மீற்றர் இடை வெளியில் பாதுகாப்பு அரணும், அதிலிருந்து வெளிப்புறத்தே கண்காணிக்க கூடியவாறு அதி உயர் வலுக் கொண்ட மின் ஒளிபாய்ச்சி இரவைப் பகலாக்கிக் கொண்டிருக்கும் வண்ணம் உச்சப் பாதுகாப்புடன் கூடியதான ஜோசப் முகாம் வன்னிக் கட்டளைப் பீடமாக நிமிந்து நிற்கிறது.

இத்தகைய உயர் பாதுகாப்பும், முக்கியத்துவமும் கொண்ட தளத்தின் மீது கடந்த 09ஆம் திகதி அதிகாலை 3.05 வான்புலிகள் ராடரின் கண்களுக்கு மண்ணைத் து}வி விட்டு துல்லியமான குண்டு வீச்சை மேற்கொண்டு கட்டளை பீடத்தை அழித்து தந்திரமாகத் தளந்திரும்ப 10 பேர் கொண்ட கரும்புலியணி தளத்தினுள் நுழைந்து துடைத்தழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வான் கண்காணிப்பு ராடர் மையத்தையும் வெடிபொருட் களஞ்சியத்தையும் தாக்கியழிக்க கிட்டுப் பீரங்கிப் படையணி துல்லியமான சூட்டாதரவினை வழங்கி பேரழிவை ஏற்படுத்தினர். புரிகள் திடீரென மேற்கொண்ட பாச்சலினால் தளத்தினுள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் படைச்சிப்பாய்கள் இலக்கின்றி வேட்டுக்களைத் தீர்த்ததனால் படைமுகாம் அல்லோல கல்லோலப்பட்டது. இத்தாக்குதலில் 20 ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும், 30ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தோடு மட்டுமல்லாமல் இரண்டு இந்தியப் பொறியியலாளர்களும் காமடைந்திருப்பது இந்திய அரசின் இரட்டை வேடத்தினை அம்பலப்படுத்திற்று.

யாரும் நெருங்க முடியாத படைத்தளத்தினுள் 10 கரும்புலிகள் எப்படி உள் நுழைந்தார்கள் என்பது விந்தையே. மற்றும் வலுவான வான் கண்காணிப்புடன் கூடிய தளத்திற்கு வான்புலிகள் பறந்துவந்து துல்லியமான குண்டுவீச்சை நிகழ்த்திவிட்டு பத்திரமாக தளம் திரும்பியது படைத்துறைத் தலைமைக்கு விழுந்த பலத்த அடி என்றே சொல்லாம். இதற்கிடையில் படைத்தரப்பு புலிகளின் வான்கலம் ஒன்றை திரத்திச் சென்று தாக்கியழித்ததாக ஒரு கதை விட்டிருக்கிறது. புலிகளின் வான் தாக்குதல் மீண்டும் நடை பெறத்தான் போகின்றது. அப்போது அதற்கு என்ன பதிலை படைத்தரப்புச் சொல்லப் போகின்றது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.

ஜோசப் படைத்ளத்திற்கு தற்போது ஏற்பட்ட சேதத்தை சாதாரணமாக ஒரு தாக்குதல் மூலம் ஏற்படுத்த வேண்டுமாயின் குறைந்தது 300 போராளிகளையாவது நேரடியாகச் சண்டையில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். அதில் கணிசமான இழப்புக்க கூட ஏற்படலாம். ஆனால் புலிகள் தாக்குதலை லாவகமாகவும், மிகக் குறைந்த வளத்தைப் பயன்படுத்தியும் சாதித்திருக்கின்றனர். இரு விமானங்களையும,; 10 கரும்புலிகளையும், பீரங்கிப் படையையும் இங்கு பயன்படுத்தி குறுகிய நேரத்தில் மிகப்பெரிய அழிவினை ஏற்படுத்தியதன் மூலம் புலிகளின் சண்டை வியூகம் மாற்றமடைந்து செல்வதோடு ஒவ்வொரு வலிந்த தாக்குதல்களையும் இம்மியளவும் பிசகாது இருக்கும் வண்ணம் மிகப் பொறுமையாகவும், நோர்த்தியாகவும் திட்டமிடப்பட்டு நெறிப்படுத்தப் பட்டிருக்கிறது. எனவே இந்த வகையிலான அதிரடிகள் இனிவரும் காலங்களில் முன்னகர்வுக்கான வழங்கல் தளங்களின் மீது இடம் பெறுவது திண்ணம்.

மேலும் வன்னியில் இயங்குகின்ற மனித நேயத் தொண்டு நிறுவனங்களை அரசு வெளியேறுமாறு பணித்திருக்கின்ற நிலையில் போர் நடவடிக்கைகளால் இடம் பெயர்ந்த இரண்டு லட்சம் வன்னி மக்களுக்கான நிவாரணப் பணிகளை அரசு பொறுப்பெற்குமா அல்லது திறம்படச் செய்யுமா? என்பது சந்தேகத்துக்குரியதே. பெருந்தொகையான ஆளணி வளத்துடன் சுடிய தொண்டர் அமைப்புக்களினால் சரிவர நிர்வகிக்க முடியாத நிலையில் இருந்த வன்னியின் நிவாரணப் பணியை மிகக்குறைந்த ஊழியர்களைக் கொண்டு அரசு எவ்வாறு நிர்வகிக்கப் போகின்றதோ தெரியவி;ல்லை. இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பெரும் மனித அவலத்தை எதிர் கொண்டிருக்கின்ற வேளையில் பாராமுகமாக இருந்த இந்திய அரசு இராணுவ ரீதியில் முண்டு கொடுத்து ஜோசப் முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரு இந்திய்ப் பொறியிறலாளர்களி படுகாயமடைந்ததும்அதுபற்றிய விசாரணைகளே மேற்கொள்ள 165 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அனுப்பியி
ருப்பது இந்திய அரசின் உள் நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

இது இவ்வாறு இருக்க மேற்கு வன்னியில் இடம்பெற்ற கடுமையான சண்டைகளை அடுத்து களமுனை அமைதியாக உள்ளது போலத் தோன்றினாலும் இவ் அமைதி என்பது புயலுக்கு முந்திய அமைதியாகவே கொள்ளப்பட வேண்டும். ஏ9 வீதியில் திரு முறிகண்டியில் இருந்து ஆரம்பித்து அக்கராயன், வன்னேரி, ஜெயபுரம் ஊடாக ஏ32 வீதியில் பல்லவராயன் கட்டில் இணையும் அக்கராயன் குளம் வீதி படைத்தரப்பின் உயர்ந்த பட்ச இலக்காகத் தற்போதுள்ளது. இவ்வீதியை அடைவதற்காகவே கடந்த வாரம் கடும் சண்டை மூண்டிருந்தது. எனவே இவ்வீதி மரண வீதியாக மாறுவது தவிர்க்க முடியாததாகின்றது. ஏனெனில் இவ் வீதிக்குத் தெற்கே ஒரு மைல் இடைவெளியில் வீதிக்குச் சமாந்தரமாக கிழக்கு மேற்காக புலிகள் அமைத்திருக்கும் பாதுகாப்பு முன்னரண் நாச்சிக்குடாக் கடற்பரப்பிலிருந்து அக்கராயனுக்கு கிழக்கு வரை அதாவது அமைதிபுரம் வரை சுமார் 20 மைல்கள் வரை நீண்டு செல்கிறது. இவ்வரணைப் பாதுகாப்பதற்கு புலிகளின் முக்கிய கட்டளைத் தளபதிகள் மூவர் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். ஆகவே இவ் அரணைத் தாண்டி நகர்வது த
ற்கொலைக்குச் சமனாகும். மேலும் இவ்வரணுக்க அப்பால் ஒரு பின்நகர்வை விடுதலைப் புலிகள் செய்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது. அவ்வாறு ஒரு பின்நகர்வை புலிகள் செய்வார்களேயானால் ஏ32 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கான பாதை திறப்பை அனுமதிக்கின்றார்கள் அல்லது விட்டுக் கொடுக்கின்றனர் என்றே கொள்ள வேண்டும்.

அத்துடன் கடந்த இரு வாரங்களின் முன்னர் பாதுகாப்பமைச்சு வெளியிட்ட அறிக்கையிலே தாங்கள் முறிகண்டியைக் கைப்பற்றி விட்டதாகவும் இன்னும் சில கி.மீற்றர்கள் நகர்ந்தால் ஏ9 வீதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விடுவோம் என்றும் தெரிவித்தனர். உண்மையில் முறிகண்டி என்று மூன்று இடங்களை அழைக்கின்றனர். முதலாவதாக பிள்ளையார் கோயில் உள்ள இடம் திருமுறிகண்டி என்றும், ஏ9 வீதியில் கொக்காவில் சந்தியிலிருந்து 2மைல் தெற்கே மாங்குளப்பக்கமாக அமைத்திருப்பது பழைய முறிகண்டி ஆகும். மூன்றாவதாக அக்கராயன் குளத்தின் நீரேந்துப் பகுதியில் இருந்து நேரெதிரே தெற்குப் பக்கமாக 5 மைல் தொலைவில் உள்ளது காட்டு முறிகண்டி ஆகும்.
இந்த காட்டு முறிகண்டிப் பிரதேசத்திற்குள் இராணுவத்தின் தாக்குதல் குழுவொன்று காட்டிற்குள் நுழைந்துவிட்டு தாங்கள்
முறிகண்டிப் பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டதாக படைத்தரப்பு தெரிவித்தது. இது போலவே அக்கராயனையும் தாங்கள் கைப்பற்றி விட்டதாக பொய்ப்பிரச்சாரம் செய்தது தெரிந்ததே. மேலும் இராணுவம் நுழைந்த காட்டு முறிகண்டியானது. ஏ9 வீதியில் உள்ள முறிகண்டியில் இருந்து தென்மேற்குத் திசையில் 8மைல் தொலைவில் உள்ளது. இங்கு மக்கள் வசிப்பதில்லை.

இவ்விடத்திற்குச் சென்று வருவதற்கு வண்டிற் பாதையைத் தவிர வேறு பாதைகள் இல்லை. அத்துடன் இராணுவத்தின் 57 வது பிரிகேட்டைச் சேர்ந்த படையினர் தற்போது நிலை கொ
ண்டுள்ள இடமான துணுக்காய் உயிலங்குளத்திலிருந்து வட கிழக்காக 7 மைல் தொலைவில் உள்ள இந்த காட்டு முறிகண்டி நோக்கி; காடுகளுடாக இரகசியமாக நகர்ந்து நிலைகொண்டு விட்டு தாம் முறிகண்டியில் நிற்பதாகப் அறிவித்திருக்கிறார்கள்..

எனவே மேற்கு வன்னியில் நிகழ்ந்த சண்டைகளைப் போல் இன்னும் பல மூர்க்கமான சண்டைகளை வரும் வாரங்களில் எதிர் பார்க்கலாம். எது எப்படியிருப்பினும் இராணுவ முன்னகர்வுக்கெதிரான புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் உக்கிரமடைந்துள்ளது. எனவே வடக்கு நோக்கிய நகர்வு கடினமாகின்ற போது வன்னியின் கிழக்குப் புறமுள்ள அதாவது ஏ9 வீதியில் உள்ள புளியங்குளம், கனகராயன்குளம், மாங்குளம், கொக்காவில், திருமுறிகண்டி ஆகிய இடங்களை நோக்கி இராணுவ முன்னகர்வுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளது. ஆகவே மொத்தத்தில் வன்னிக் களமுனை இறுக்கமடைந்து செல்கின்றது எனலாம்.

புலிகளின் மௌனம் சொல்லும் செய்தி என்ன?

கடந்த இருவாரங்களாக வன்னிமேற்கு போர் முனையில் தொடர்ச்சியான சண்டைகள். முன்னேற்ற முயற்சிகள் முறியடிப்புகள் என பல்வேறுபட்ட செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்தது யாவரும் அறிந்ததே. எனினும் கடந்தகால வன்னிப் போர்முனையில் சண்டையின் போக்கினை உற்று நோக்குகின்ற போது ஒரு சமச்சீரான போக்கினை அவதானிக்க முடியும் புலிகளின் சண்டை விய10கத்தினை அதாவது தற்காப்புத்தாக்குதல் என்றாலும் சரி வழிமறிப்புத்தாக்குதல் என்றாலும் சரி ஒரு வகையான சீரான போக்கினை கடைப்பிடிப்பதை அவதானிக்கலாம் அதே போன்று அரசபடைகளும் ஒரு வகையான சீரான முன்னேற்ற முயற்சிப் போக்கினை கையாள்வதையும் உணரமுடியும். எது எப்படி இருப்பினும் முரண்பட்ட இருதரப்பும் தற்போது களமுனையில் கடைப்பிடிக்கும வேறுட்ட போர் உத்திகளை நோக்குவோம்

கடந்த ஒரு வருடமாக மன்னார் வவுனியா வீதியிலிருந்து மன்னார் பெருநிலப்பரப்பினை
அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதோடு ஏ32 வீதியை கைப்பற்றி ப10நகரி ஊ10டாக யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதையை திறந்து யாழ்பாணத்தில் நிலை கொண்டுள்ள படையினருக்கான வழங்களை இலகுவாக்குவதனை நோக்காகக் கொண்டு அரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையானது வவுனியா மாவட்டத்தில் உள்ள கல்மடுவிலிருந்தும்; பிரமணாலங்குளத்திலிருந்தும் நேர் வடக்காக பாலமோட்டை, மடு நோக்கி மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வுகளில் பாலமோட்டை நோக்கி நகர்ந்த படையினர் பலமுறை முயன்றும் புலிகளின் கிடுக்குப்பிடிக்குள் அகப்பட்டிருக்கும பாலமோட்டையை படையினரால் முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. காரணம் ஏ9 வீதிக்கு சில மைல் து}ரம் மேற்கில்தான் பாலமோட்டை அமைந்துள்ளது. எனவே ஏ9 வீதியூடாகவோ அல்லது அதற்கு அண்;மையாகவோ இரானுவம் நகர்வதை அனுமதிப்பதில்லை என்ற முடிவினை புலிகள் எடுத்திருந்தனர.; இதனாலேயே இப்பகுதி இராணுவ நகர்வை இன்று வரை தடுத்து நிறுத்தியுள்ளனர் என கொள்ளலாம்.

அடுத்து மடு நோக்கி நகர்ந்த படையினரை பண்டிவிரிச்சானிலும், விளாத்திகுளத்திலும் நான்கு மாதங்களுக்கு மேல் தடுத்து நிறுத்தி இராணுவத்தின் முன்னணிப் படைப்பிரிவான 57 வது டிவிசன் படையினருக்கு தொடர்ச்சியான இழப்புக்களை ஏற்படுத்தி ஒரு கட்டத்தில் பாலம்பிட்டி பெரியமடு நோக்கி பின்நகர்ந்திருந்தனர். இப்பின்நகர்வுக்கு முன்னதாக புலிகளின் முதன்மைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கடுமையான சுகயீனம் காரணமாக இக்களமுனையிலிருந்து வெளியேறி மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில் சாவடைந்தமையும், அதனால் புலிகளின் அணிக்கு ஏற்பட்ட மனச்சோர்வும் இக்களமுனையில் இருந்து பின்நகர்வதற்கு ஒரு காரணமாகக் கூட இருந்திருக்கலாம்.

தொடர்ந்து பாலம்பிட்டி, பெரியமடுவை நோக்கி படையினர் நகர்வை மேற்கொண்ட அதே நேரம். மன்னார் உயிலங்குளத்திலிருந்தும், தள்ளாடியிலிருந்தும். சம நேரத்தில் அடம்பன், ஆண்டாங்குளம், ஆட்காட்டி வெளி. ஆகிய பகுதிகளை நோக்கி நகர்ந்த வேளை கடுமையான எதிர்த்தாக்குதலை நடாத்தி படையினருக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தியவாறு தமது ஆளணி ஆயுத வளங்களை பாதுகாத்தவாறு பள்ளமடுவுக்கு பின்நகர்ந்து பள்ளமடுவை தக்கவைப்பதற்கான முயற்ச்சிகளில் புலிகள் ஈடுபட்டிருந்தனர். இக்கட்டத்தில் பாலம்பிட்டி, பெரிமடு, ஆண்டாங்குளம், அடம்பன் உள்ளிட்ட பகுதிகள் இராணுவ வசமாகின.

அடுத்து இராணுவத்தரப்பு புலிகளின் கேந்திரநிலை என வர்ணி;க்கப்பட்ட விடத்தல்தீவை கைப்பற்றுவதற்காக தொடர்ச்சியாக பள்ளமடுவுக்கு முன்னேயுள்ள நாயாற்று வெளியில் புலிகள் அமைத்திருந்த மண் அணையுடன் கூடிய காப்பரணை உடைத்து உள்நுழைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சிகள் எதுவும் பயனளிக்காத நிலையில் பெரியமடுவில் இருந்து நேர் வடக்காக பூநகரி வரை படர்ந்து கிடக்கின்ற காட்டுப்பகுதியூடாக சிறாட்டி குளத்திற்கு இரகசியமாக நகர்ந்து சிறாட்டி குளத்தைக் கைப்பற்றியதோடு அங்கிருந்து நேர் மேற்கே திரும்;பி கூராய், ஆத்திமோட்டை, கள்ளியடி என நகர்ந்து. கள்ளியடியில் ஏ32 வீதியை வெட்டிக் குறுக்கறுத்து பள்ளமடு விடத்தல் தீவுக்கான புலிகளி;ன் வழங்கல்ப் பாதையைத் துண்டித்து படிப்படியாக மன்னார் மாவட்டத்தின் முழுப்பிரதேசத்தையும் இராணுவம் கைப்பற்றிக் கொண்டது.

சிறாட்டி குளத்திலிருந்து படைகள் சற்றுக் கிழக்கே நகர்ந்து நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், வவுனிக்குளத்தின் தென்பகுதி அணைக்கட்டு வரை படையினர் முன்னேறியிருந்தனர். அத்தோடு சிறாட்டிகுளத்திலிருந்து வடக்காக நகர்ந்த படைகள் ஒட்டங்குளம் வரையும் நகர்ந்திருந்தனர். இப்பகுதிகளில் ஏற்பட்ட வழிமறிப்புத் தாக்குதல்களிலும் சரி புலிகள் இயலுமான வரை எதிர்த் தாக்குதலை நடாத்தி எதிர்த் தரப்புக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படு;த்தியவாறே பின்நகர்ந்தனர். இறுதியாக வெள்ளாங்குளத்திற்குத் தெற்கே பாலியாற்றை அண்மித்ததாக பாலியாற்றுக்குச் சமாந்தரமாக மேற்குக் கிழக்காக மேற்குக் கடற்கரையில் இருந்து வவுனிக்குளம் வரை புலிகள் அமைத்திருந்த பாதுகாப்பு அரண்களைத் தாண்டி முன்னேறுவதற்கு ஏ32 வீதியிலும், நட்டாங்கண்டல் துணுக்காய் வீதியிலும், வவுனிக்குளத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பாலிநகர் ஊடாகவும் முன்னேறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சிகள் பயனளிக்காத நிலையில் சம நேர த்தில் வவுனிக்குளத்தின் வடகிழக்குப் புறமாக கொல்லவிளாங்குளம் மற்றும் வன்னிவிளாங்குளம் நோக்கிய ஒரு நகர்வையும், வெள்ளாங்குளத்திற்கும் கல்விளானுக்கும் இடைப்பட்ட பெரும் காட்டுப்பகுதியினு}டே வடக்காக நகர்ந்து வெள்ளாங்குளம் துணுக்காய் வீதியை கைப்பற்றி அவ்வீதியையும் தாண்டி மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து சில மைல்கள் து}ரத்தில் மேற்கு நோக்கித் திரும்பி விடத்தல்தீவைக் கைப்பற்றியது போன்றதொரு ஊடறுப்பை ஏ32 வீதியில் முழுங்காவில் ஏரிப்பகுதியடியில் செய்ததன் மூலம் முழுங்காவிலையும் இராணுவம் கைப்பற்றியிருந்தது.

அடுத்து கல்விளான் துணுக்காய்ப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு இராணுவம் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் ஒவ்வொன்றின் போதும் புலிகளின் முன்னரங்கப் பகுதியில் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்திக்க நேர்ந்தது இதனாலேயே காட்டுப் பகுதியினு}டாக வடக்கு நோக்கி தென்னியங்குளக் காட்டுப் பகுதிவரை நகர்ந்து அங்கிருந்து தென் கிழக்கில் உள்ள உயிலங்குளத்தைக் கைப்பற்றி துணுக்காயை மும்முனைகளில் முற்றுகையிட்டதன் மூலம் கல்விளான் துணுக்காய்ப் பகுதியிலிருந்து புலிகள் மல்லாவி, தேறாங்கண்டல் நோக்கி பின்நகர் வேண்டதாயிற்று. எனினும் இங்கும் மல்லாவியை முற்றுகையிடுவதற்காக மல்லாவியி;ன் கிழக்குப் புறத்தே நகர்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சி புலிகளின் பலத்த எதிர்த் தாக்குதலினால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஏ9 வீதிக்கு அண்மையாக உள்ள வன்னிவிளாங்குளப் பகுதிக்கு இராணுவம் நகர்வதை புலிகள் அனுமதிக்க மாட்டார்கள் எனக்கொள்ளலாம்.

எனவே பாலமோட்டையிலிருந்து கிழக்குப் புறமாக நகர்வதற்கோ. அல்லது அதனை அடுத்த குஞ்சுக்குளம், மூன்றுமுறிப்பு, வவுனிக்குளம் ஆகியவற்றைத் தொடுக்கின்ற நோர் கோட்டிற்குக் கிழக்கே அதாவது ஏ9 வீதிக்கு அண்மித்த பகுதியை நோக்கி இராணுவம் நகர்வதை தொடர்ச்சியாக விடுதலைப் புலிகள் பலத்த எதிர்த் தாக்குதலை மேற்கொண்டு தடுத்து நிறுத்தி வைத்திருப்பனை அவதானிக்க முடிகிறது. இதிலிருந்து வன்னியின் கிழக்குப் புறம் நோக்கி நகர்வதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். என்பது புலனாகின்றது. இதற்கு இன்னுமோர் சான்று என்னவெனில் மணலாற்றுப் பகுதியில் இராணுவம் மேற்கொண்ட முன்நகர்வுகள் யாவற்றையும் புலிகள் பலத்த எதிர்த் தாக்குதலை நடத்தி முறியடித்திருக்கின்றனர்.

மேலும் கடந்த வாரம் வன்னேரிக்குளம், அக்கராயன் பகுதிகளை நோக்கி காடுகளினு}டாக இராணுவம் நகர்ந்து அப்பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக வன்னேரிக்குளக் காட்டுப்பகுதியில் கடுமையான சண்டைகள் இடம்பெற்றிருக்கின்றன. இங்கும் வன்னேரிக்குளப் பகுதிக்கு நகர்ந்த இராணுவத்தினர் அடுத்த கட்டமாக மேற்கு நோக்கித்திரும்பி ஜெயபுரம், பல்லவராயன் கட்டுப்பக்கமாக முன்நகர முயல்கின்றனர். இதன் மூலம் எல் வடிவில் நகர்ந்து நாச்சிக்குடாவில் நிலைகொண்டிருக்கும் புலிகளை பின்நகர்த்தும் தந்திரோபாயத் தாக்குதலாகவே அமைகிறது.

அக்கராயன் பகுதியில் தரி;த்து நிற்பதாகவும் கிளிநொச்சியை அடைய இன்னும் 12 மைல்கள் து}ரம் தான் இருப்பதாகவும் அரசதரப்பு பெருமெடுப்பிலான பரப்புரையை மேற்கொண்டாலும் கூட உண்மையில் அக்கராயனைக் கைப்பற்றி அங்கிருந்து கிளிநொச்சிக்கு நகருகின்ற திட்டம் எதுவும் படைத்தலமையிடம் தற்போதைக்கு இல்லை என்றே சொல்லலாம். காரணம் ஏ9 வீதிக்கு அண்மையாக இராணுவம் நகர்வதை விடுதலைப் புலிகள் கடுமையாக எதிர்ப்பர். எனவே தற்போதைய சூழலில் சண்டை வலுவுடைய முன்னணிப் படைப்பிரிவுகளை கிளிநொச்சி நோக்கி நகர்த்தி பெரும் சண்டைகளை எதிர்கொண்டு படையணிகளைச் சிதைக்க இராணுவத் தலமை தயாராக இல்லை. எனினும் கிளிநொச்சி நோக்கி நகர்வு என்று ஒரு சிறிய திசை திருப்புத் தாக்குதல் இடம் பெறுவதற்கான சாத்தியமே உள்ளது. இனிவரும் வாரங்களில் கிளிநொச்சி மீது கடுமையான எறிகணைத் தாக்குதல் மூலம் கிளிநொச்சி நகர மக்களை இடம் பெயரச் செய்து கிளிநொச்சியின் இயல்பு நிலையை முடக்க முயலலாம்.

கடந்த முதலாம் திகதி மல்லாவியை இராணுவம் கைப்பற்றி விட்டதாக அறிவித்திருக்கிறது. இனி அடுத்த கட்டமாக மல்லாவியின் நேர்வடக்கே நகர்ந்து தேறாங்கண்டல், ஜங்கங்குளம், ஆகியவற்றைக் கைப்பற்றுவதோடு இப்பிரதேசத்துள் அடங்குகின்ற ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தையும் படைகள் கைப்பற்றி விட்டோம். செய்தியை வரும் வாரங்களில் அரச ஊடகங்களுடாக அறியலாம். அக்கராயன் பகுதியின் காட்டுப் பகுதிவரை முன்னேறிய இராணுவம் அடுத்த நகர்வாக பல்லவராயன் கட்டு – அக்கராயன்குளம் வீதியைக் கடந்து நேர் வடக்காக முன்னேறி எள்ளுக்காட்டுப் பகுதியூடாக பூநகரி - பரந்தன் வீதியில் உள்ள நல்லு}ரைக் கைப்பற்றி யாழ்க்குடாக் கடல்நீரேரியுடன் தொடுப்பதன் மூலம் மேற்கு வன்னியின் கடற்பகுதியையும், நிலப்பகுதியையும் கைப்பற்றி யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை (ஏ32 வீதியூடாக) திறந்து தமது முதல் இலக்கினை பூர்த்தி செய்ய முனைகின்றது.

அடுத்து ஏ32 வீதியூடாக பல்லவராயன்கட்டு நோக்கியோ அல்லது நாச்சிகுடா, கிராஞ்சி பகுதிகளுடாகவோ முன்னேறுகின்ற போது கடும் எதிர்த் தாக்குதலை புலிகள் நடத்தினாலும் கூட ஒரு கட்டத்திற்கு அப்பால் தமக்கு இழப்புக்கள் அதிகரிக்கும் எனக் கருதினால் இங்கிருந்தும் கூட புலிகள் பின்வாங்கத் தயங்க மாட்டார்கள். சிலசமயம் ஏ32 வீதியை தக்கவைக்க இயலுமானவரை போரிட்டு எதிரணிக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி தமக்குத் தேவையேற்படின் படிப்படியாக பின்வாங்குகின்ற ஆச்சரியமான முடிவைக்கூட புலிகளின் தலைமை எடுக்கலாம். இப்பின் வாங்கலானது தமது இலக்கினை எதிர்பார்த்து காத்திருப்பதாகக் கூட அமையலாம். ஏனெனில் ஜயசிக்குறு}ய் நடவடிக்கையின் போது ஏ9 வீதியை விட்டுக் கொடுக்கின்ற முடிவு எடுத்ததனாலேயே வன்னியின் கிழக்குக் கட்டளைப் பீடம் மேற்குக் கட்டளைப் பீடம் என இரண்டு கட்டளைப் பீடங்களை புலிகள் உருவாக்கியிருந்தமையை நாம் நினைவில் கொள்ளத்தக்கது.

இங்கே இராணுவத்தின் ஒவ்வொரு படைநடவடிக்கையிலும் இடங்களைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவும் காட்டுப்பகுதியினு}டாகவே நகர்ந்து பின்னர் மேற்கு நோக்கித் திரும்பி பெட்டியடித்தல், அல்லது பட்டியடைத்தல் முறைமூலம் படிப்படியாக பிரதேசங்களை கைப்பற்றுகின்ற மூலஉபாயத்தை கடைப்பிடிப்பதனையும். பிரதான இலக்கான ஏ32 வீதியை கட்டுப்பாட்டில் கெண்டுவருவதோடு வன்னி மேற்கின் கடற்பகுதியை அதாவது மன்னாரில் இருந்து பூநகரி வரையான கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கத்தை இல்லாதொழித்து வன்னி மேற்கினை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்ற நோக்கத்தை கொண்டதாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. எனவே பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்துக்கான பாதை திறப்பு என்பது மன்னாரில் இருந்து பூநகரி வரை வடக்குத் தெற்காக நீண்டு பரந்து கிடக்கின்ற காட்டுப்பகுதியூடான தொடர்ச்சியான நகர்வின் மூலம் சாத்தியப்படும் எனப்படைத் தலைமை உறுதியாக நம்புகின்றது. இது வியட்நாமில் அமெரிக்கப் படைகள் வியட்கொங் போராளிகள் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு ஒத்ததான ஒரு படை நகர்வாகக் குறிப்பிட முடியும்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆரம்பத்தில் கொரில்லாப் போர்முறை படையணியாக இயங்கி வந்த புலிகள் படிப்படியாக மரபுவழிப் படையணியாக பரிநாம வளர்ச்சி அடைந்து முப்படைகளும் கொண்ட மரபுவழி இராணுவமாக தம்மை நிலை நிறுத்திக் கொண்ட போதும் முன்னைய கெரில்லாப் படையணிகளுக்குரிய சிறப்பம்சமான காட்டுப்புறச் சண்டைகளின் யாம்பவான் என்ற நிலையைத் தற்போது சற்று இழந்திருப்பதை மறுக்க முடியாது இதனை கடந்த காலங்களில் முதலாம், இரண்டாம் கட்ட ஈழப்போரிலும், மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதிக்காலம் வரையிலும் காட்டுப் புறச்சண்டைகளில் புலிகள் தான் ராஜாக்கள் என்ற நிலை இருந்தது உண்மையே. ஆனால் மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட ஜயசிக்குறு}ய் இராணுவ நடவடிக்கையில் ஏற்பட்ட காட்டுச் சண்டைகளில் புலிகள் தங்களுடைய ராஜாக்கள் என்ற நிலையை இழந்திருந்தனர். ஆனால் நகரப்புறங்கள், கிராமங்கள், வயல்வெளிகள், சதுப்புநிலங்கள், கடற்கரையோரங்கள் ஆகியவற்றில் ஏற்படுகின்ற சண்டைகளில் தங்களுடைய கீர்த்;தியை நிலைநிறுத்தினர். ஏனெனில் மரபுவழி இராணுவ மயமாக்கலில் புலிகள் சீரிய வளர்ச்சியடைந்துள்ளமையை இது எடுத்துக் காட்டுகிறது. அதற்காக காட்டுப்புறச் சண்டையைப் புலிகளால் எதிர்கொள்ள முடியாது என்று நான் சொல்லவரவில்லை. முன்பு இருந்ததிலும் விட தற்போது சற்றுப் பின்னடைந்திருக்கின்றனர். என்றே சொல்லலாம். எனவே எதிர் காலத்தில் இக்குறைபாட்டை நிவர்த்தி செய்கின்ற நடவடிக்கையில் புலிகள் இயக்கம் தற்போது கூடிய கவனம் செலுத்துவதாக வன்னித் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

எது எப்படியாயினும் வன்னிப் போர்களமானது இரு தரப்பிலும் ஒரு சீரான போக்கினை அவதானிக்க முடிகிறது. படைத்தரப்பை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய பிரதான முன்னேற்ற ஊடகமாக யாழ்க் கடல்நீரேரிப் பகுதியில் இருந்து வில்பத்துக் காட்டுப் பகுதிவரை ஏ9 வீதிக்கும் - ஏ32 வீதிக்கும் இடையில் சமாந்தரமாக வடக்குத் தெற்காக பரந்து கிடக்கின்ற வன்னி மேற்கின் காட்டுப் பகுதி விளங்குகின்றது. பிரதான நகர்வானது இக்காட்டுப் பகுதியூடாக நகர்ந்து படிப்படியாக ஏ32 வீதியையும், அதனை அண்மித்த மேற்குக் கடற்கரையையும் வன்னி மேற்கின் பிரதான தமிழர் வாழ்விடங்களைக் கையகப் படுத்துவதோடு ஏ9 வீதியின் செயற்பாட்டை முடக்குவதுமாகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது.

அதே நேரம் புலிகளை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய தாக்குதல் வியூகங்கள் யாவும் வன்னி கிழக்கை இராணுவம் நெருங்காமல் அதாவது ஏ9 வீதியை இராணுவத்தை அண்மிக்க விடாமல் கடுமையாக எதிர்த்து தடுத்து நிறுத்துவதோடு மேற்கு வன்னியின் வடபுறமாக நகருகின்ற இராணுவ முன்னணிப் படைப்பிரிவை தாக்கியழித்து படிப்படியாக முன்னணிப் படைப்பிரிவுகளைச் சிதைத்து இயலுமான வரை தடுத்து நிறுத்தி ஒரு கட்டத்தில் தந்திரமாகப் பின்நகர்ந்து ஆயுத ஆளணி வளங்களைப் பாதுகாப்பதோடு கூம்புவடிவில் முன்னகர அனுமதிக்கின்ற போக்கினை மேற்கௌ;வதாகத் தெரிகின்றது. இதிலிருந்து விடுதலைப் புலிகள் எந்தப் பiடைத்துறை ஆய்வாரள்களும் எதிர்பார்க்காத ஆனால் ஆச்சரியமான முடிவை எடுத்திருக்கிறார்கள். எனவே வன்னிப் போர்க்களம் என்பது புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சீராக நகர்ந்து செல்வதாகவே தோன்றுகிறது. ஆகவேதான் அரச தரப்பும் சரி ஊடகங்களும் சரி பலவாறான அறிக்கைகளையும், செய்திகளையும். வெளியிட்டாலும் புலிகள் தரப்பு இவற்றை காதில் வாங்காதது போன்று பெரிதாக எதனையும் அலட்டிக் கொள்ளாமல் மௌனமாகத் தங்களுடைய நடவடிக்கைகளை ஓசைபடாமல் செய்து கொண்டிருக்கின்றனர். எனவே புலிகளின் மௌனம் சொல்லும் செய்தி என்னவெனில் புலி என்னும் பொறியில் எலி இன்னும் பொறியில் உள்ள இரையைக் கௌவவில்லை என்பதேயாகும்.




மரணத்துள் வாழ்வோம்


வன்னி யுத்த முனையில் கடந்த வாரங்களில் கடும் மோதல்கள் இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன் பகுதிகளில் இடம் பெற்று வந்த கடும் போர் தற்போhது கிழக்கு வன்னி நோக்கியும் நகர ஆரம்பித்திருக்கின்றது.

விடத்தல்தீவு, வெள்ளாங்குளம், முழங்காவில், ஆகிய மேற்கு வன்னிப் பிரதேசங்களை கடும் எதிர்ப்புகளின்றி கைப்பற்றிய அரசபடைகள் நாச்சிக்குடாவை கைப்பற்ற முடியவில்லை ஏ9 வீதியில் திரு முறிகண்டியில் இருந்து ஆரம்பித்து அக்கராயன், வன்னேரி, ஜெயபுரம் ஊடாக ஏ32 வீதியில் பல்லவராயன் கட்டில் இணையும் அக்கராயன் குளம் வீதி படைத்தரப்பின் உயர்ந்த பட்ச இலக்காகத் தற்போதுள்ளது. இவ்வீதியை அடைவதற்காகவே கடந்த வாரங்களில் கடும்
சண்டை மூண்டிருந்தது. எனவே இவ்வீதி மரண வீதியாக மாறுவது தவிர்க்க முடியாததாகின்றது.

ஏனெனில் இவ் வீதிக்குத் தெற்கே ஒரு மைல் இடைவெளியில் வீதிக்குச் சமாந்தரமாக கிழக்கு மேற்காக புலிகள் அமைத்திருக்கும் பாதுகாப்பு முன்னரண் நாச்சிக்குடாக் கடற்பரப்பிலிருந்து அக்கராயனுக்கு கிழக்கு வரை அதாவது அமைதிபுரம் வரைக்கும் ஏன் திருமுறிகண்டி வரைக்கும் சுமார் 26 மைல்கள் வரை நீண்டு செல்கிறது. இந்த வீதியினு}டாகவே பல்லவராயண் கட்டு, கரியாலை நாகபடுவன், மணியங்குளம், கிராஞ்சி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி நாச்சிக்குடாவை இராணுவத்தின் பழைய பல்லவியான பெட்டியடித்தல் முறை மூலம் கைப்பற்ற முயல்கின்றனர். இம்முயற்ச்சி பயனளிக்காது போகவே ஏ9 வீதியைப் படைகள் குறிவைக்கின்றனர். இதனால் ஏ9 வீதியினு}டாக புலிகளுக்கு கிடைத்துவரும்
உதவிகளை தடுத்துவிடலாம் என நம்புகின்றனர்.

பொதுவாகப் படைகள் மேற்கு வன்னியில் முன்னேற முடியாத ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கிழக்கு நோக்கியே தமது முன்னேற்ற முயற்ச்சியை மேற்கொண்டனர். தற்போதும் அவர்கள் அம்முயற்ச்சியையே மேற்கொள்கின்றனர். ஆனால் படைகள் வன்னியின் கிழக்கு நோக்கி அதாவது ஏ9 நோக்கி ஒரு முன்னேற்ற முயற்ச்சியை மேற்கொண்டு புலிகளை இந்தப்பக்கம் போக்குக் காட்டிவிட்டு நாச்சிக்குடா, அக்கராயன், மற்றும் வன்னேரிப் பகுதிகள் நோக்கி திடீரென முன்னேறி அப்பகுதிகளைக் கைப்பற்ற முயல்கின்றனர். அதேபோலவே வன்னிவிளாங்குளம், மற்றும் பாலமோட்டைப் பகுதிகளிலிருந்தும் ஏ9 வீதியைப் படைகள் குறிவைக்கின்றனர்.


அத்துடன் கடந்த வாரம் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் விடுதலைப்புலிகள் இரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தினர் என்பதே. தமது அழிவு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் புலிகள் இயலாமையின் விரக்தி காரணமாக கடந்த 15ஆம் திகதி தங்களிடம் இருந்த கடைசி அஸ்திரமான நச்சு வாயுக்களைப் பயன்படுத்தினர் என படைகள் பிரச்சாரம் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் நச்சு வாயூ அல்ல கலகத்தை அடக்கப் பயன்படு
ம் ஸிஎஸ் (CS.Gas) என அறிவித்தனர். உண்மையில் இவ்வகை வாயூக்கள் பேராபத்தை ஏற்படுத்தக் கூடியதல்ல. வெறும் கண் எரிவுத்தன்மையையும், தலைச்சுற்று வாந்தி போன்றவற்றையுமே ஏற்படுத்தக் கூடியது.

விடுதலைப்புலிகள் இரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். என்று கூறுவதன் மூலம் வன்னிப் போர் முனையில் படைத்தரப்பு இரசாயண ஆயுதங்களை அல்லது அல்லது இரசாயண வாயுக்களைப் பயன்படுத்த முற்படுகின்றது. அ
த்துடன் புலிகள் இரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள் என பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட அதேநேரம் அந்த இரசாயண வாயுத்தாக்குதல்களை தாம் சந்திக்கத் தயாராக இருப்பதாக படைத்தளபதி சரத்பொன்சேகா தெரிவி;த்தார்.

மேலும் அவர் கூறும்போது “விடுதலைப்புலிகள்” ஸிஎஸ் ரக ரசாயணங்களை எம்மீது ஏவுவார்களாயின் அதிலும்
நச்சுத்தன்மை கூடிய ஆயுதங்களை அவர்கள் மீது ஏவுவதற்கு இறமையுள்ள அரசு என்ற ரீதியில் எமக்கு சகல உரிமையும் உண்டு. தேவையேற்படின் இவற்றைப் பயன்படுத்தத் தயங்கமாட்டோம் என்று கூறியுள்ளதிலிருந்து அரசு இவ்வகை வாயுக்களைப் பயன்படுத்துவதற்கு தயாரக உள்ளநிலையில் புலிகள் தான் இவ்வகை இரசாயணத்தாக்குதல்கள் நடாத்தினார்கள் அதனாலேயே நாமும் அவர்கள் மீது இவ்வகைத் தாக்குதல்களை நடாத்தினோம் எனக் காரணம் கூறலாம் அல்லவா?

அதாவது அரசபடைகள் வன்னி மேற்கைக் கைப்பற்றி வன்னியின் கிழக்குப் பகுதியான முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பகுதி நோக்கி மேலும் நகரும் போது சண்டைகள் கூடுதலாக நேருக்கு நேர் இடம்பெறும் அந்த நேரத்தில் புலிகளின் கையே மேலோங்கும் என்பது படைகளுக்கு நன்கு தெரியும். ஆகவே அந்த நேரத்தில் இந்த நச்சு ஆயுதங்களைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் முண்ணனிப் படைகளை பலவீனப்படுத்தி இலகுவாக அப்பிரதேசங்களைக் கைப்பற்றலாம் என படைத்தரப்பு நம்பியிருக்கலாம்.

அரசபடைகளிடம் இவ்வகை இரசாயண ஆயுதங்கள் ஏற்கனவே உள்ளன. இதற்கு ஆராதமாக சிறுத்தீவுத் தாக்குதலின் போது விடுதலைப்புலிகளினால் கைப்பற்றப்பட்ட இரசாயண ஆயுதத் தடுப்புத் தலைக் கவசங்கள் இன்று சான்று பகர்கின்றன. அத்துடன் 17.08.2001 இல் விடுதலைப்புலிகளின் வன்னித் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அரசு இரசாயண ஆயுதத்தைக் கொள்வனவு செய்திருக்கின்றன அதை நம் இனத்தை அழிப்பதற்கு பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சிதைப்பதற்கு முற்படுகின்றனர். எனத்தெரிவித்தனர். இதை அப்போது அரசு புலிகள் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர் எனக் கூறித் தப்பிவிட்டனர். ஆனால் இன்று அது உண்மையாக்கப்பட்டு விட்டது.

இது இப்படியிருக்க உணவை ஆயுதமாக அரசு பயன்படுத்த முற்படுகிறது. வன்னியில் படையினர் எதிபார்த்த வெற்றி அவர்களுக்கு இல்லை. எனவே மக்களை வன்னியில் இருந்து வெளியேற்றிவிட்டால் புலிகள் தனிமைப் பட்டுவிடுவார்கள். இதனால் அவர்களை இலகுவாக அழித்துவிடலாம் என படைத்த
ரப்பு கணக்குப் போட்டுள்ளது.

இதனாலேயே வவுனியாவுக்கு மக்களை வரவழைத்து அங்கு அவர்களைத் தங்கவைக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் ஒருவர் கூட அங்கு வரவில்லை. அவ்வாறு வந்தால் என்னநடக்கும் என்பது நன்றாகவே அவர்களுக்குப் புரியும் அதாவது அவர்கள் வவுனியா வந்தால் இளைஞர்கள், யுவதிகள். வேறாகப் பிரிக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். அத்துடன் கடத்தல்கள், காணாமல்ப் போதல்கள் தாராளமாக இடம்பெறும். மேலும் அவர்கள் தற்காப்புப் பயிற்ச்சி எடுத்தவர்கள் எனக்கூறி அவர்களைத் தடுப்புக்காவல்களில் வைக்கவும் முற்படலாம் எனவே இவற்றையெல்லாம் உணர்ந்த மக்கள் நாம் செத்தாலும் விடுதலைப் புலிகளுடனும், தம்மை நம்பி போராடத்துணிந்த தேசியத்தலைவருடனும் தான் இறுதிவரை இருப்போம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.


எனவே வவுனியாவுக்கு மக்களை வரவழைக்க மேற்கொண்ட முயற்ச்சியும் தோல்வியில் முடிய அனைத்துலக தொண்டு நிறுவனங்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்று அதிலும் அரசு வெற்றிபெற்றது எனவே அதிலும் வன்னியில் உள்ள தமிழ்மக்களை அசைக்க முடியவில்லை. எனவே தற்போது வன்னியில் அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் வெளியேறியதும் மக்கள் மீது கண்மூடித் தனமான நவீன ரக ரொக்கட்கள் மூலம் விமானத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம் வெளியில் சொல்ல அவர்கள் கூட இல்லையல்லவா?

இதிலும் அம்மக்களை அசைக்க முடியாது போகவே உணவை ஆயுதமாக்கி அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க முற்படுகின்றனர். அத்துடன் உணவை தடுப்பதன் மூலம் வன்னிமக்களை வெளியேற்றினால் அங்கு மக்கள் இல்லை. ஆகுவே அங்கு உணவுஅனுப்ப வேண்டிய தேவையிராது. இதன் மூலம் அங்கு உணவுப் பொருட்கள் எதனையும் அனுப்பாது புலிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு ஆட்பற்றாக்குறையையும் ஏற்படுத்தி அவர்களை அழித்துவிடலாம். என்பதே படைகளது திட்டம். இதே போலவே நைஜீரிய மக்களையும் அடக்கினார்கள் என்பது வரலாறு.

எனவே புலம்பெயர்ந்த மக்கள் அனைவரும் வன்னியில் வாடும் எம்மக்களுக்கு எங்களாலான பங்கினை மேற்கொள்ளவது நமது கடமையே. ஏனெனில் இப்படியானதொரு முற்றுகைக்குள் பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்கள் அகப்பட்டபோது பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு ஏனைய புலம்பெயர் நாடுகளில் உள்ள யூதர்களால் உருவாக்கப்பட்டதே இன்றைய இஸ்ரேல் ஆகும். எனவே நம் தமிழின அழிப்பின் இறுதிக்கட்டத்தை உடைக்கவேண்டியது நம் புலம்பெயர் தமிழர்களின் கடமையே